search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு
    X

    முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு

    மழை முற்றிலும் ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. #MullaPeriyar
    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாததால் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை காரணமாக திடீரென முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு 381 கன அடி நீரே வருகிறது. அணையில் இருந்து 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    இந்த நீர் பாசனத்துக்குப் போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 1376 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 2,050 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர் மட்டம் 68.42 அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.65 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 115.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. #MullaPeriyar
    Next Story
    ×