search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு ஐஎன்டியுசி ரூ.1.85 கோடி நிதி உதவி
    X

    மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழ்நாடு ஐஎன்டியுசி ரூ.1.85 கோடி நிதி உதவி

    மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. சார்பில் திரட்டப்பட்ட ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி காசோலையாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது. #keralafloods
    ராயபுரம்:

    மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதி உதவி வழங்க அகில இந்திய ஐ.என்.டி.சி. தலைவர் டாக்டர் ஜி.சஞ்ஜீவ ரெட்டி இந்தியா முழுவதும் உள்ள ஐ.என்.டி.யூ.சி. உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். இதையடுத்து அனைத்து மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர்களும் ஒருங்கிணைந்து ரூ.10 கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் பேரில் முதல் தவணையாக தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. சார்பில் திரட்டப்பட்ட ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி காசோலையாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தலைவர் தேவராஜன், செயல் தலைவர் கதிர்வேல், அகில இந்திய அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி பெல் ஐ.என்.டி.யு.சி. தலைவர் வி.ஆர்.ஜெகநாதன், தமிழ்நாடு ஐ.என். டி.சி. இளைஞர் அணி தலைவர் மற்றும் திருச்சி பெல் செயல் தலைவர் வி.ஆர்.கல்யாணகுமார், டி.வி.எஸ். பிரேக்ஸ் இந்தியா எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. இளைஞரணி பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கேரள ஐ.என்.டி.யு.சி. தலைவர் சந்திரசேகரன் முன்னிலையில் கேரள முதல்- மந்திரியிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்கினர். #keralafloods
    Next Story
    ×