search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரைவு பட்டியல் இன்று வெளியீடு- ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்தனர்
    X

    வரைவு பட்டியல் இன்று வெளியீடு- ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்தனர்

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 4,738 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். #TN #TNDraftRoll
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10-1-2018 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 18 லட்சத்து 37ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருந்தனர்.

    அந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்க விரும்புபவர்கள் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதன்படி பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    பட்டியலை மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் சீனி அஜ்மல்கான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நர்மதா தேவி, பல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    புதிய பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1098 பேர் சேர்க்கப்பட்டு, 272 பேர் நீக்கப்பட்டனர். ஈரோடு மேற்கு தொகுதியில் 1754 பேர் சேர்க்கப்பட்டு, 425 பேர் நீக்கப்பட்டனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 1005 பேர் சேர்க்கப்பட்டு, 446 பேர் நீக்கப்பட்டனர். பெருந்துறை தொகுதியில் 223 பேர் சேர்க்கப்பட்டு, 42 பேர் நீக்கப்பட்டனர்.

    பவானி தொகுதியில் 780 பேர் சேர்க்கப்பட்டு, 243 பேர் நீக்கப்பட்டனர். அந்தியூர் தொகுதியில் 419 பேர் சேர்க்கப்பட்டு, 65 பேர் நீக்கப்பட்டனர்.

    கோபி தொகுதியில் 875 பேர் சேர்க்கப்பட்டு, 787 பேர் நீக்கப்பட்டனர். பவானிசாகர் தொகுதியில் 961 பேர் சேர்க்கப்பட்டு, 97 பேர் நீக்கப்பட்டனர்.

    ஆக மொத்தமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 115 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். 2 ஆயிரத்து 377 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதிய வாக்காளர் பட்டியலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 432 ஆண்களும், 9 லட்சத்து 37 ஆயிரத்து 888 பெண்களும் அடங்குவர். ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். மற்றவர்கள் 70 பேர் உள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட இந்த புதிய பட்டியலில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.

    இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 103 வாக்காளர்களும் உள்ளனர்.

    மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 960 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 15 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    பவானி தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 687 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 666 வாக்காளர்களும் உள்ளனர்.

    கோபி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 616 வாக்காளர்களும், பவானி சாகர் 2 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
    Next Story
    ×