search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    139 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    139 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்ததால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 139.09 அடியாக உள்ளது. #MullaPeriyarDam #MullaPeriyar
    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் பிறபகுதிகளில் கனமழை பெய்தது. எனவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 142 அடியை எட்டியது. அணை பலமாக இல்லை. நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என கேரளா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிமையை விட்டுக்கொடுக்கமுடியாது என வாதிட்டது. இருந்தபோதும் 140 அடிவரையே நீர்தேக்கப்பட்டது.

    தற்போது மழை ஓய்ந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து 2227கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து 2206 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 139.09 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 2358 கனஅடிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.42 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.8, தேக்கடி 1.8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. #MullaPeriyarDam #MullaPeriyar
    Next Story
    ×