search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை படத்தில் காணலாம்.
    X
    சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை படத்தில் காணலாம்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுந்தரவல்லி அனுப்பி வைத்தார்.

    திருவள்ளூர்:

    கேரள மாநிலம் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல தரப்பட்டவர்களும் நிவாரணப் பொருட்களை சேர்த்து அனுப்பி வருகிறார்கள்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்ட அளவிலும் வட்ட அளவிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    திருவள்ளூர் வட்டத்தில் வட்டாட்சியர் தமிழ் செல்வன் மற்றும் நகராட்சி ஆணையர் முருகேசன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஜார் வீதியில் கடை கடையாக நேரில் சென்றும், பொது மக்களிடமும் வெள்ள நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.

    இதில் உணவுப் பொருட்கள், அரிசி, துணி வகைகள், மருந்து வகைகள். குடிநீர் பாட்டில்கள் மற்றும் அத்தியா வசியப் பொருட்கள் என மொத்தம் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பில் 40 டன் கொண்ட பொருட்கள் கிடைத்தது.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் இன்று காலை 4 லாரிகள் மூலம் கேரளா மாநிலம் பாலக்காடு கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லப்பட்டது.

    இதனை கலெக்டர் சுந்தர வல்லி அனுப்பி வைத்தார். நிவாரண பொருட்களை ஒப்படைக்க 4 வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் செல்கிறார்கள்.

    Next Story
    ×