search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் 80 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிவு
    X

    ஒகேனக்கல்லில் 80 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிவு

    கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி மேலும் சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு இருப்பதாக நீர்ப்பாசனத்துறையினர் தெரிவித்தனர்.

    நேற்று மாலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 30ஆயிரம் கன அடி வீதமாகவும், கபினி அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதமாகவும் நீர் வந்தது. கபினி அணையில் இருந்து 40ஆயிரம் கன அடி நீர் வீதமும், கே.ஆர்.எஸ். அனணயில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதமும், தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

    கர்நாடகா மற்றும் தேரளாவில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது இதை தொடர்ந்து கபினி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. திறந்துவிடப்பட்ட நீர் இன்று மாலை தமிழகத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நேற்று விடப்படும் நீர்வரத்து 92 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் சரிந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று இரவு கபினி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது, இது இன்று மாலை ஒகேனக்கல் வந்தடைவதால். மேலும் ஒகேனக்கல்லில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் காவிரி கரையோர மக்கள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து 37-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal #Cauvery

    Next Story
    ×