search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் வெளியே வந்த போது எடுத்த படம்.
    X
    வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் வெளியே வந்த போது எடுத்த படம்.

    ஜெயில் வாழ்க்கை எங்களை புது மனிதனாக மாற்றியுள்ளது - கைதிகள் பேட்டி

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 2-வது கட்டமாக விடுவிக்கப்பட்ட 24 கைதிகள் ஜெயில் வாழ்க்கை எங்களை புது மனிதனாக மாற்றியுள்ளது என்று கூறினர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்தார்.

    இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல், விதிகளின்படி மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய, தகுதியான நபர்களை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர்.

    இதன் அடிப்படையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 பெண் கைதிகள் உள்பட 200 கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியல் கூடுதல் காவல் துறை இயக்குநர் (சிறைத் துறை) அலுவலகத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    2-வது கட்டமாக மேலும் 24 பேரை விடுதலை செய்வதற்கான ஆணை நேற்று இரவு வேலூர் சிறைக்கு வந்தது. இதையடுத்து இன்று காலை 6.30 மணிக்கு ஜெயிலில் இருந்து 24 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

    கைதிகளுக்கு உடமைகள், சிறையில் வேலை பார்த்ததற்கான கூலி பணம் ஆகியவற்றை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    சிறைக்கு வெளியே காத்திருந்த கைதிகளின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.

    வேலூர் ஜெயிலில் இருந்து வந்த கைதிகள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    நாங்கள் போதையிலும், சூழ்நிலை காரணமாக தவறு செய்து ஜெயில் தண்டனை பெற்றோம். ஜெயிலுக்குள் செல்லும் போது பயமாகவும், கஷ்டமாகவும் இருந்தது.

    குடும்பத்தினரை பிரிந்து மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால் ஜெயிலில் எங்களுக்கு பல தொழில்கள் கற்று தந்தனர். உள்ளே இருந்ததால் பீடி, சிகரெட், மது பழக்கங்களை அடியோடு விட்டு விட்டோம். பூமியில் இன்று மீண்டும் குழந்தையாக பிறந்தது போல உள்ளது.

    ஜெயிலில் கற்று கொடுத்த தொழில்கள் எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இனிமேல் வாழும் வாழ்க்கைதான் எங்களுக்கு உண்மையான வாழ்க்கை எங்களை விடுதலை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #MGRCenturyCeremony

    Next Story
    ×