search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 50 படகுகள் விடுவிப்பு
    X

    இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 50 படகுகள் விடுவிப்பு

    இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 50 படகுகள் விடுவிக்கப்பட்டன. அந்தப்படகுகள் அனைத்தும் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. #TNFishermen
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு 5-வது மாதம் வரை தமிழக மீனவர்களின் 184 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

    அந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசும், தமிழக அரசும் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

    மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு 184 படகுகளையும் விடுவிக்க இலங்கையில் உள்ள நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

    அதன்பேரில் முதல்கட்டமாக ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள 38 படகுகளும் மன்னார் நீதிமன்றத்தில் உள்ள 12 விசைப்படகுகளும் விடுவிக்கப்பட்டன.

    அந்தப்படகுகள் அனைத்தும் இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மற்ற படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

    தமிழக மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கை சென்று விடுவிக்கப்பட்ட விசைப்படகுகளை தமிழகத்துக்கு கொண்டு வர உள்ளனர். #TNFishermen
    Next Story
    ×