search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்
    X

    வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு: சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்

    சேலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர் ஆனார். #seeman

    சேலம்:

    நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் மணக்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சீமான் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் சீமான் வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஆட்சியாளர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்னை கோர்ட்டு, ஜெயில் என்று அலைக்கழித்தால் மக்கள் போராட வரமாட்டார்கள் என நினைக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கவில்லை எனில் 8 வழிச்சாலைக்கு நாங்களே பூட்டுபோட்டு விடுகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசுகிறார். முதல்-அமைச்சர் பேசும்போது இன்னும் 10 ஆண்டுகளில் வாகனங்கள் அதிகமாகிவிடும். 8 வழிச்சாலை போட்டால் விபத்துக்கள் குறைந்து விடும் என்கிறார். அமைச்சரும், முதல்-அமைச்சரும் பேச்சிலே முரண்பாடுகள் உள்ளது. ஆகவே மக்களுக்கு பிடிக்காத 8 வழிச்சாலையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். seeman

    Next Story
    ×