search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் நாளை மறுநாள் கவர்னர் ஆய்வு: தடையை மீறி போராட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு
    X

    புதுக்கோட்டையில் நாளை மறுநாள் கவர்னர் ஆய்வு: தடையை மீறி போராட்டம் நடத்த தி.மு.க.வினர் முடிவு

    புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொள்ள வரும் கவர்னர் பன்வாரிலாலுக்கு எதிராக போராட்டம் நடத்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. #tngovernor #dmk

    திருச்சி, ஜூலை. 18-

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட் டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்து வருவ தோடு, பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களையும் பெற்று வரு கிறார். மேலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோச னையும் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் கவர்னர் ஆய்வு செய்வதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப் பாக கவர்னர் பங்கேற்க செல் லும் மாவட்டங்களில் தி.மு.க. வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்ன ருக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபட்டால் 7 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக் கப்படும் என்று சமீபத்தில் கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கவர்னர் அடக்கு முறையை கையாள்வதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல் படுவதாகவும் தி.மு.க. உள் ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன.

    இந்தநிலையில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்க ளில் நாளை மறுநாள் 20-ந் தேதி நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

    இந்தநிலையில் புதுக் கோட்டையில் ஆய்வு மேற் கொள்ள வரும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி காட்டுவது என, புதுக்கோட்டையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி கள் ஆலோசனை கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதையடுத்து போராட்டம் நடத்த அனுமதி அளிக்கு மாறு, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ., கே.கே.செல்லப் பாண்டியன் ஆகியோர், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜை சந் தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.

    இதனிடையே கவர்னர் வருகையையொட்டி பாது காப்பு பணிகள் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீசாருடன் ஆய்வு மேற்கொள்ள திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி வந்திருந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவரை, தி.மு.க. நிர்வாகிகள் ரகுபதி, கே.கே.செல்லப்பாண்டியன், நெச வாளர் அணி மாவட்ட அமைப் பாளர் பாலு உள்ளிட் டோர் சந்தித்து, கவர்ன ருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்து வதற்கு அனுமதி கோரினர்.


    அப்போது டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, போராட்டத்திற்கு அனுமதி அளிக்க இயலாது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் கவர்னர் மாளிகை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, கவர் னரை பணி செய்ய விடா மல் தடுத்ததாக ஐ.பி.சி. 124-ன் கீழ் கைது செய்யப் படுவீர்கள். இதன் மூலம் 7ஆண்டுகள் சிறை தண்ட னைக்குள்ளாகும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். எனவே போராட் டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்தலாம் என்று தெரிவித் தார்.

    இதற்கு தி.மு.க.வினர், போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஒதுக்கப்பட்ட இடங் கள் வழியாக கவர்னர் செல்ல வாய்ப்பு இல்லை.அத னால் அவர் செல்லும் வழி யில் ஒரு இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்த டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, அப்படி ஒதுக்க முடியாது. நாமக்கல் பிரச்சினைக்கு பிறகு அரசாணை கடுமை யாக உள்ளது. அதன்படி முன் னதாக கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளது என் றார்.

    இதை ஏற்க மறுத்த தி.மு. க.வினர் தடையை மீறி கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப் பட்டு சென்றனர். பின்னர் வெளியே வந்த தி.மு.க. நிர் வாகிகள் நிருபர்களிடம் கூறும் போது, கருப்பு கொடி காட்ட முறையாக அனுமதி கேட்டோம். அனுமதி இல்லை என்று வாய்மொழியாக சொன்னார்கள்.

    நாமக்கல் பிரச்சினைக்கு பிறகு சட்டம் கடுமையாக் கப்பட்டு உள்ளதாக கூறுகி றார்கள். தி.மு.க. கருப்பு கொடி காட்டுவது உறுதி. எத்தனை பேரை கைது செய்தாலும் செய்யட்டும். சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்றனர். போராட்டம் நடத்துவோம் என தி.மு.க.வினர் திட்டவட் டமாக தெரிவித் துள்ளதால், பாதுகாப்புகளை பலப் படுத் துவது தொடர்பாக போலீ சார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். #tngovernor #dmk

    Next Story
    ×