search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி
    X

    நிர்மலாதேவியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலா தேவியின் ஜாமீன் மனு இன்று, 7-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. #Nirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அவருடன் தொடர்பு உடையதாக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    கடந்த 6 முறையும் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் அவர் 7-வது முறையாக ஜாமீன் கேட்டு மனு செய்தார்.

    இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நிர்மலாதேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    மேலும் வழக்கு விசாரணையை நீதிபதி, வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #Nirmaladevi
    Next Story
    ×