search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் - பி.ஆர்.பாண்டியன்
    X

    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் - பி.ஆர்.பாண்டியன்

    குடிமராமத்து பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தை வரவேற்கிறோம் என்று பி.ஆர்.பாண்டியன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Chennairain #PrPandian

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காவிரியில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணைபோய்விடக் கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

    நடப்பாண்டு ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.

    இந்நிலையில் கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டியே தீருவோம் என பேசியுள்ளார். இது குறித்து ஆணைய தலைவர் தனது கண்டனத்தை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது தனது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்.

    மேலும் ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி எதிர்பார்த்து தமிழக விவசாயிகள் உள்ளனர். எனவே இது குறித்து ஆணைய தலைவர் மசூத் உசேனை விரைவில் சந்தித்து பேச உள்ளோம்.

    குடிமராமத்துப் பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறை வேற்றுவதை கண்காணிக்க அரசுத் துறை செயலாளர்கள் நியமிக்க வேண்டுமென முதல்-அமைச்சரை வலியுறுத்தியதன் பேரில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    இக்குழு தமிழகம் முழுவதும் ஆய்வு பணிகளை உடன் தொடங்குவதோடு, பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வு கூட்டங்கள் நடந்திட வேண்டுமென குழு தலைவரும் வேளாண் துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடியை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Chennairain #PrPandian

    Next Story
    ×