search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்தெந்த மாதங்களில் எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்? சட்டசபையில் முதல்வர் தகவல்
    X

    எந்தெந்த மாதங்களில் எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்? சட்டசபையில் முதல்வர் தகவல்

    டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்னீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     

    கூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என கூறினார்.

    ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
    Next Story
    ×