search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை 5-வது நாளாக நீடிப்பு
    X

    தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை 5-வது நாளாக நீடிப்பு

    தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து 5-வது நாளாக இன்று நடந்து வருகிறது. #Maoist

    கவுண்டம்பாளையம்:

    கேரள காடுகளில் பதுங்கி இருக்கும் சுந்தரி என்ற பெண் மாவோயிஸ்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வர இருப்பதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து தமிழக- கேரள எல்லையில் உள்ள மாங்கரை, ஆனைகட்டி பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை தொடர்ந்து 5-வது நாளாக இன்று நடந்து வருகிறது. போலீசார் இருசக்கர வாகனம், கார் மற்றும் பஸ்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

    கேரள பகுதிகளில் இருந்து வரும் மற்றும் செல்லும் பஸ்களில் உள்ளே ஏறி சென்று போலீசார் ஒவ்வொருவரையும் பார்த்தும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களையும் சோதனை செய்தனர். மேலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒவ்வொரு வாகனமும் கண்காணிக்கபட்டு வருகிறது.

    இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் வேட்டைதடுப்பு காவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு பெரியநாயக்கன் பாளையம் (பொறுப்பு) ரேஞ்சர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் கோவை வனமண்டல உதவி வனபாதுகாவலர் ராஜேஷ் கலந்து கொண்டு வேட்டைதடுப்பு காவலர்களிடம் பேசும்போது:-

    பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கேரளா அருகிலுள்ள ஆனைக்கட்டி, மாங்கரை, பாலமலை மற்றும் தோலம்பாளையம் மலைப் பகுதிகளில் புதியதாக ஆட்கள் தென்படுகின்றனர்களா? என்றும், மலைக் கிராமங்களில் உள்ள ஆதிவாசி மக்களுடன் புதியவர் யாராவது பழகி வருகின்றனர்களா? என்றும் தெரிந்து உடனடியாக நக்சல் பிரிவுக்கும், வனத்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் யாரும் தனியாக மலைப்பகுதிக்கு செல்லாமல் மூன்று, நான்கு பேர் கூட்டாக செல்ல வேண்டும். அதேபோல வேட்டைதடுப்பு காவலர்களுக்கு உள்ள குறைகளை ரேஞ்சர் மூலம் மண்டல வனப்பாதுகாவலருக்கு கொண்டு சென்று அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். #Maoist

    Next Story
    ×