search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயங்கும் வியாபாரிகள் - பொதுமக்கள் அவதி
    X

    கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயங்கும் வியாபாரிகள் - பொதுமக்கள் அவதி

    கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுவதால் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். #fakecurrency
    கோவை:

    கோவையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் ஒரு கோடியே 18 லட்சம் அளவுக்கு பிடிபட்டுள்ளது, வியாபாரிகள், பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதனால் கோவையில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், சிறு குறு தொழிற்சாலைகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். குறிப்பாக காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சில்லரையாக கொடுங்கள் என வியாபாரிகள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அதை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர்.

    பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது பல முறை பார்த்துதான் வாங்குகிறார்கள். இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளநோட்டுகளை ஏஜெண்டுகள் மூலம் புழக்கத்தில் விடுகிறார்களா? என்று தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கள்ளநோட்டுகளை கண்டறியும் எந்திரங்களை பணம் எண்ணும் இடத்தில் பயன்படுத்துவது தற்போது கோவை நகரில் அதிகரித்துள்ளது. 
    Next Story
    ×