search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    35-வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
    X

    35-வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

    கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 35-வது நாளாக தொடருவதால் சுமார் 17½ கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    சங்கரன்கோவில்:

    60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுப்புலாபுரம் கிராம பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களும் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக‌ தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பாளை தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 35-வது நாளாக நீடிக்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 17½ கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×