search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 40 சதவீத கடைகள் அடைப்பு - பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின
    X

    மதுரையில் 40 சதவீத கடைகள் அடைப்பு - பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின

    மதுரையில் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்- ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரையின் முக்கிய பகுதியான விளக்குத்தூண், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 40 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    அரசு பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. டீக்கடைகள், ஓட்டல்கள் பெரும்பாலான பகுதிகளில் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. முக்கிய இடங்களில் போலீசார் வாகனங்களில் ரோந்து வருகின்றனர்.

    Next Story
    ×