search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்-புரோக்கர் கைது
    X

    திருவண்ணாமலையில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்-புரோக்கர் கைது

    திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர். #bribe

    திருவண்ணாமலை:

    சென்னையை சேர்ந்தவர் சுனில்குமார். இவர், திருவண்ணாமலை பெரிய தெருவில் லாட்ஜ் வைத்துள்ளார். சுனில்குமார், கொசமடத் தெருவில் ஒரு நிலத்தை வாங்கி பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருவண்ணாமலை டவுன் சர்வேயர் (நில அளவையர்) கருணாகரனிடம் (வயது 50) விண்ணப்பித்தார்.

    பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு சர்வேயர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, தனது லாட்ஜ் மேலாளர் ஜெயச்சந்திரன் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சுனில்குமார் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணக்குமார் தலைமையிலான போலீசார் ரூ.20 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவி ஜெயச்சந்தி ரனிடம் இன்று கொடுத்து அனுப்பினர்.

    டி.எஸ்.பி. சரவணக் குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் சர்வேயர் அலுவலகத்திற்கு சென்று மறைந்து இருந்தனர். சர்வேயர் கருணாகரனிடம், ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக ஜெயச்சந்திரன் கொடுத்தார்.

    பணத்தை சர்வேயர் கருணாகரன் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், லஞ்சம் வாங்க உடந்தையாக புரோக்கர் மூர்த்திையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #bribe

    Next Story
    ×