search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னர் பதவி விலக வேண்டும்- நாராயணசாமி
    X

    பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக கவர்னர் பதவி விலக வேண்டும்- நாராயணசாமி

    கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடக கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    கர்நாடக மாநில ஐ.என்.டி.யூ.சி. சார்பில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை நடத்தப்படுகிறது. 27-வது ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து கிளம்பியது. சேலம், கோவை, கொச்சின், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, விழுப்புரம் வழியாக வந்த ஜோதி யாத்திரை நேற்று புதுவைக்கு வந்தது.

    இன்று காலை ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும் புதூருக்கு கிளம்பியது. ஜோதி யாத்திரையாக வந்தவர்களுக்கு காங்கிரஸ் துண்டு அணிவித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்து ஜோதியை வழியனுப்பினார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., டெல்லி பிரதிநிதி ஜான்குமார், புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    கர்நாடக ஐ.என்.டி.யூ. பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் 27-வது ஆண்டாக ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரையை நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

    ராஜீவ்காந்தி இன்றைய காலத்தில் தலைவர்கள் இறந்தவுடன் மறந்து விடுகின்றனர். சாதனை புரிந்த தலைவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருப்பார். அதுபோல் ராஜீவ்காந்தி நினைவில் இருப்பவர்.

    ராஜீவ் விமான பைலட்டாக இருந்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்திராகாந்தி அவரை அரசியலுக்கு இழுத்தார். அரசியலுக்கு வந்த ராஜீவ், நாடு விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.

    கம்ப்யூட்டரை அவர்தான் கொண்டு வந்தார். பஞ்சாயத்துராஜ் சட்டம், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ராஜீவ் கால கட்டத்தில் நாடு நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும் அரசியல் சூழ்ச்சியால் அவர் தோல்வி அடைந்தார்.

    அடுத்த தேர்தலில் வெற்றியடைய நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி பிரசாரத்துக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூரில் தப்பினால் புதுவை, மயிலாடுதுறைதான் இலக்காக இருந்தது. இன்று நாடு ஒற்றுமையாக இருக்க ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிந்திய ரத்தம்தான் காரணம்.

    தற்போது நாடு மதச் சார்புடையவர்களிடம் சிக்கி தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினருக்கும், தலித் மக்களுக்கும் பல தொந்தரவு தருகின்றனர். தாக்குகின்றனர்.

    பா.ஜனதா ஜனநாயக முறையில் ஆட்சி அமைப்பதில்லை. பல இடங்களில் குறைந்த இடங்களை பெற்றிருந்தாலும் கோவா, மணிப்பூர், மேகாலாயாவில் அங்குள்ளவர்களை அரசியல் பலத்தால் மிரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர்.

    அதேபோல கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க நினைத்தனர். ஆனால், அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 இடங்களையே பிடித் திருந்தது.

    ஆனால், காங்கிரஸ், ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை பிடிக்க பேரம் பேசினர். அந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என கூறிவிட்டனர்.

    மோடி நாங்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். விலைக்கு வாங்கி ஆட்சி செய்ய மாட்டோம். அரசுக்கு எந்த தொல்லையும் தர மாட்டோம் என்கிறார்.

    பின்னர் ஏன் கர்நாட காவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வந்தார்? கர்நாடகாவில் குறைவான எண்ணிக்கை கொண்ட பா.ஜனதாவை பதவியேற்க அழைத்த கர்நாடகா கவர்னர் தாமாகவே பதவி விலக வேண்டும்.

    இதில், ஐகோர்ட்டு மூலம் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. 2019 பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராகி நாட்டில் அமைதியை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×