search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 3 சுரங்க நடைபாதைகள் இணைப்பு
    X

    அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 3 சுரங்க நடைபாதைகள் இணைப்பு

    அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் 3 சுரங்க நடைபாதைகள் இணைக்கப்படுகிறது. சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் முதன் முறையாக சூரிய ஒளி மின்சாரம் உபயோகப்படுத்தப்பட உள்ளது. #MetroTrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்கு வரத்து நடந்து வருகிறது.

    பயணிகள் - பொது மக்களிடையே மெட்ரோ ரெயிலுக்கு வரவேற்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    நேரு பூங்கா - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரையிலான பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. விரைவில் இந்த வழித்தட பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    அண்ணாசாலையில் சுரங்க மெட்ரோ ரெயில் பயணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சைதாப்பேட்டை, டி.எம்.எஸ்., அரசினர் தோட்டம் ஆகிய 3மெட்ரோ   ரெயில் நிலையங்களுடன் அண்ணா சாலையில் ரோட்டை கடப்பதற்காக அமைக்கப்பட்ட மாநகர சுரங்க நடைபாதைகள் இணைக்கப்பட உள்ளது.

    இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பயணிகள் எளிதில் மெட்ரோ நிலையத்துக்குள் செல்ல முடியும். இதற்கான இணைப்பு பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் மேற்கொண்டுள்ளது.

    சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் முதன் முறையாக சூரியஒளி மின்சாரம் (சோலார் பவர்) வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ரெயில் நிலையத்துக்கு உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மெட்ரோ ரெயில் டெப்போவில் ஏற்கனவே சூரியஒளி (சோலார் பேனல்) மின்சாரம் தயாரித்து உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    சூரியஒளி 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலைய மின்சார விளக்குகள் எஸ்கலேட்டர், லிப்ட், குளிர்சாதன வசதிக்கு தேவையான மின்சாரம் பூர்த்தி செய்ய முடியும். #MetroTrain

    Next Story
    ×