search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரிக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- தமிழக அரசுக்கு தமிழிசை கேள்வி
    X

    மத்திய மந்திரிக்கு கருப்புக்கொடி காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- தமிழக அரசுக்கு தமிழிசை கேள்வி

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    மதுரை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று ராமநாதபுரம் சென்றபோது பரமக்குடியில் அவருக்கு தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டினர். பா.ஜனதா தொண்டர்கள் சென்ற கார் மீது செருப்பும் வீசப்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள் ளார்.

    இது தொடர்பாக மதுரை யில் இன்று அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரை பாராட்ட வேண்டாம். ஆனால் பழிக் காமல் இருக்கலாம்.

    அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது வேதனை அளிக்கிறது. வளர்ச்சிப்பணிகளுக்காக மத்திய மந்திரி வரும்போது தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டுவது ஏற்புடையது அல்ல.

    இது தான் அவர்கள் கற்றுக்கொண்ட கடமை, கண்ணியம், கட்டுப்பாடா?

    இந்த சம்பவத்தில் கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது தமிழக அரசு, ராமநாதபுரம் கலெக்டர், போலீஸ் சூப்பி ரண்டு நடவடிக்கை எடுக் காதது ஏன்?

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.

    காவிரி விவகாரம் தொடர்பாக கருப்புக்கொடி காட்ட தி.மு.க.-காங்கிரசுக்கு எந்த அருகதையும் இல்லை. நியாயப்படி பார்த்தால் அவர்களுக்கு எதிராகத்தான் கருப்புக்கொடி காட்ட வேண்டும்.

    தமிழர்கள் மீது அக்கறையற்ற கட்சி என பாரதீய ஜனதா மீது பொய்யான பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் தான் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. 10 மந்திரிகள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த நிலை யில் காவிரிக்காக செய்தது என்ன? இது பற்றி ஸ்டாலி னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாராக உள்ளேன். அவர் தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×