search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்
    X

    கணவருடன் சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம்

    தஞ்சையில் குடும்ப பிரச்சியில் பிரிந்த கணவரை சேர்த்து வைக்ககோரி பெண் வக்கீல் 2-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாச புரத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது33). இவருக்கும் தஞ்சை ரெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (27) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    அன்பழகன் தஞ்சை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இதேபோல் சரண்யாவும் தஞ்சை கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    கணவர் வீட்டில் சேர்ந்து வாழ்வதற்கு சரண்யா தஞ்சை ஜே.எம் எண் 1-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதேபோல் அன்பழகன் தஞ்சை முதன்மை சார்பு நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சரண்யா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தஞ்சை ஜே.எம் கோர்டு நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

    இதையடுத்து சரண்யா மீது கடந்த மார்ச் 7-ந் தேதி தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் மறுநாள் வக்கீல்கள் நடத்திய சமாதான பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு சரண்யா தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இதன்பின்னர் ஒன்றரை மாதம் கழித்து நேற்று சரண்யா தஞ்சை ஜே.எம் எண் 1-வது நுழைவு வாயிலில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி தர்ணா போராட்டம் தொடங்கினார்.

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தர்ணா பேராட்டம் நடத்தி வருகிறார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×