search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்
    X

    சென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம்- அய்யாக்கண்ணு தகவல்

    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை வலியுறுத்தி சென்னையில் 10-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி:

    நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக்கோரியும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கினார்.

    அப்போது நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது,

    மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை உண்டால் ஆண்மை குறைவு, பெண்களுக்கு கருவுறும் தன்மை இழப்பு ஏற்படும். எனவே பிரதமர் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்ததுபோல் மரபணு மாற்றப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கவேண்டும், நதிகளை இணைக்கவேண்டும் என்றார். அதேபோல், விவசாயம் அழிவதற்கு காரணம் தனிநபர் காப்பீடு இல்லாததுதான். 30 சதவீதம் தனிநபர் காப்பீடும், பயிர் காப்பீடும் அவசியம். ரூ.2000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    ஆனால், தற்போது வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான பரம்பிக்குளம்ஆழியாறு திட்டத்தில் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    இந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி வரும் மே 10-ந்தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்படும். திட்டத்தை செயல்படுத்தும் வரை கண்டிப்பாக போராட்டத்தை கைவிட மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பிஏபி திட்டம் தொடங்கும் இடமான மேல்நீராறு, கீழ்நீராறு ஆகிய அணைகளையும், காடம்பாறை, அப்பர் ஆழியாறு ஆகிய அணைகளையும் பார்வையிட்டார். பிஏபி திட்டத்தின் மற்ற தொகுப்பு அணைகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

    உடன் முன்னோடி விவசாயிகள் பட்டீஸ்வரன், சாந்தலிங்ககுமார் உட்பட பலர் இருந்தனர்.

    Next Story
    ×