search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு - பொதுமக்கள் அவதி
    X

    சென்னையில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு - பொதுமக்கள் அவதி

    சென்னையில் தினமும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை. தேவைக்கு அதிகமாக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

    சென்னையில் ஆர்.ஏ.புரம், கோட்டூர் புரம், அடையாறு, மந்தைவெளி, நங்கநல்லூர், ஆலந்தூரின் ஒரு பகுதி மற்றும் வடசென்னையில் இந்த நிலை உள்ளது.

    பெரும்பாலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் தூக்கமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ஆனால் இதை தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் மறுக்கின்றனர். அனைத்து துணை மின் நிலையங்களும் ரெகுலராக பராமரிக்கப்பட்டு வருகிறது. பழைய கேபிள்களால் எந்த பிரச்சினையும் இல்லை.

    தற்போது கோடைகாலம் என்பதால் மின்சார‘லோடு’ அதிகரித்து அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. உடனே எங்களது ஊழியர்கள் அங்கு சென்று அதை விரைவில் சரிசெய்கின்றனர்.

    சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு 1912 உதவி எண் மூலம் நுகர்வோரிடம் இருந்து மின்வினியோகம் குறித்த புகார்கள் பெறப்பட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படுகின்றன என தெரிவித்தனர். #tamilnews

    Next Story
    ×