search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு - திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் மறியல்
    X

    விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு - திண்டுக்கல்லில் ஆசிரியர்கள் மறியல்

    திண்டுக்கல்லில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். #teachers

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் புனித வளனார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    அங்கு வந்த ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவேண்டும்.

    அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும். பள்ளிகளில் நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் பணிகுறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஆதிஷேசய்யா குழுவை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    பொதுச்செயலாளர் வின்செண்ட் பால்ராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். #teachers

    Next Story
    ×