search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 2-வது முறையாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது
    X

    வேலூரில் 2-வது முறையாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது

    அக்னிக்கு முன்பே வேலூரில் 2-வது முறையாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    வேலூர்,:

    கோடை காலத்தில் வழக்கமாக வெயிலில் தாக்கம் வேலூரில் அதிகளவில் இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய சில நாட்களிலேயே வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. படிப்படியாக வெயில் அளவு அதிகரித்து வருகிறது.

    கடந்த 18-ம் தேதி 102.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து கடந்த 20-ம் தேதி 106 டிகிரி வெயில் கொளுத்தியது.

    அதன் பின் வந்த நாட்களிலும் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில் நேற்று முன்தினம் 103.1 டிகிரியாக வாட்டியது.

    இந்த அளவு நேற்று மீண்டும் அதிகரித்து 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இந்த ஆண்டில் 2-வது முறையாக 106 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது. நேற்று காலை 8 மணி முதலே கட்டெரித்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஜூஸ், ஐஸ்கிரீம், இளநீர் கடைகளில் குவிந்தனர்.

    பெரும் பாலானோர் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். மேலும் அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    இரவில் மின் விசிறிகளில் இருந்து அனல் காற்றே வந்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

    மே மாதம் 4-ம்தேதி அக்னி வெயில் தொடங்க உள்ளது. இப்போதே 106 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் அக்னி நட்சத்திரத்தில் வெயில் 110 டிகிரியை தாண்டி கொளுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    Next Story
    ×