search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது- ஜிகே வாசன்
    X

    மக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது- ஜிகே வாசன்

    மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் இருக்கின்ற பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் இருக்கின்ற அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி. மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    அதனை விட்டுவிட்டு மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் விவசாயிகள், பொது மக்கள் விரும்பாத பல திட்டங்களை மத்திய அரசும் தமிழக அரசும், திணிக்க முயற்சிக்கிறது.

    மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓ.என்.ஜி.சி. மின் பைப் லைன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க முயற்சிப்பதும், இதற்காக தமிழக அரசு அனுமதி கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது.

    இந்த திட்டங்களினால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு வேளாண் தொழில் படிப்படியாக நலிவடைந்து விவசாயமே நடைபெறாமல் போகக்கூடிய நிலை ஏற்படும்.

    நிலத்தடி நீர் மாசுபடும், நீர்மட்டம் குறைந்து போகும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், பலவிதமான நோய்கள் உருவாகும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

    தமிழக அரசும், மத்திய அரசின் திடங்களுக்கு தமிழக விவசாயிகள், பொது மக்கள் போன்றோரிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு, பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×