search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறும் காட்சி.
    X
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறும் காட்சி.

    அரக்கோணம் ரெயில் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது

    அரக்கோணம் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த பணி இன்று முதல் மே மாதம் 6-ந்தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது.
    அரக்கோணம்:

    இன்று முதல் மே மாதம் 6-ந்தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. 1, 2 ஆகிய நடைமேடைகளில் 26 பெட்டிகளும், மேலும் 26 பெட்டிகள் நிற்கும் வகையில் புதிதாக ஒரு நடைமேடை அமைத்தல், மின்னணு சிக்னல் முறையை மாற்றி அமைத்தல், பாதுகாப்பு மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்காக வளைந்து, நெளிந்து செல்லும் 2 ரெயில் பிளாட் பாரம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் ரெயில் பயண நேரம் 20 நிமிடம் மிச்சமாகும். 1-வது பிளாட் பாரம் ஏ, பி, சி என்று 3 பிரிவாக மாற்றப்படுகிறது.

    எனவே இன்று முதல் மே 1-ந்தேதி வரை 12 நாட்களுக்கு அரக்கோணம் நிலையத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரையில் ரெயில் போக்குவரத்து தடைபடும்.

    மே 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையில் அரக்கோணம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரெயில்களும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தாமதமாக செல்லும். பணிகள் முழுமைபெறும் நாளான 6-ந்தேதி அரக்கோணத்துக்கு எந்த திசையில் இருந்தும் ரெயில் சேவை இருக்காது.

    அதன்படி அன்றைய தினம் சென்னை சென்டிரல்-மைசூரு சதாப்தி, சென்டிரல்-கோவை (கோவை எக்ஸ்பிரஸ்), சென்டிரல்-திருப்பதி சப்தகிரி, சென்டிரல்-ஜோலார்பேட்டை ஏலகிரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இருமார்க்கத்திலும் ரத்துசெய்யப்படுகிறது. கோவை- சென்னை சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தாகிறது.

    சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் (வ.எண்-16053) 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இயக்கப்படாது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் கட்டணங்கள் பயணிகளுக்கு முழுமையாக திருப்பி வழங்கப்படும்.

    ரெயில் சேவை மாற்றம் குறித்து பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் சென்டிரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, கூடூர், திருத்தணி, பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்தின் 138 என்ற எண்ணிலும் பயணிகள் தொடர்புகொள்ளலாம்.

    Next Story
    ×