search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்-திருத்தணியில் 103 டிகிரி வெயில்: அனல் காற்றால் பொதுமக்கள் அவதி
    X

    வேலூர்-திருத்தணியில் 103 டிகிரி வெயில்: அனல் காற்றால் பொதுமக்கள் அவதி

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வேலூர், திருத்தணியில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இரவில் அனல் காற்று வீசுவதால் பொது மக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
    வேலூர்:

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வேலூர், திருத்தணியில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்த வரை இன்னும் வெயில் 100 டிகிரியை எட்டவில்லை. ஆனாலும் அனல் காற்று வீசுகிறது.

    அதே சமயம் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் கடந்த நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் அடிக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் இளநீர் குளிர்பானங்கள் தர்பூசணி விற்பனை சூடுபிடித்துள்ளது.

    காலை 10 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரிக்கிறது. நேற்று வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி கொளுத்தியது. அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, குடியாத்தம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இரவில் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பகலில் வெளியே வராமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. வெயில் காலங்களில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமென சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. திருத்தணியில் அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் பதிவானது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

    வெப்ப சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×