search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அருகே வாய்க்கால் கரையில் கொட்டப்பட்ட ஆதார் கார்டுகள்
    X

    திருப்பூர் அருகே வாய்க்கால் கரையில் கொட்டப்பட்ட ஆதார் கார்டுகள்

    திருப்பூர் அருகே குப்பையில் கொட்டப்பட்ட ஆதார் கார்டுகளை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் அலகுமலை சாலையில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இதன் கரையில் ஆதார் கார்டுகள், டெலிபோன், பில்கள், எல்.ஐ.சி. கடிதம், மாணவர்களுக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்டவைகள் கொட்டப்பட்டு கிடந்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். தாசில்தார் கோபால கிருஷ்ணன் பி.ஏ.பி. வாய்க்கால் கரைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது அங்கு கொட்டப்பட்டு கிடந்த ஆதார் மற்றும் தபால்கள் பெரும்பாலானவைகள் சாமுண்டிபுரம், திருபூலுவ பட்டி, வாஞ்சி நகர் முகவரியில் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தினார்.


    தபால் ஊழியர் தான் இதனை கொட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தபால் ஊழியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கோபிநாதன் பி.ஏ.பி. வாய்க்கால் கரைக்கு வந்து அங்கு கொட்டப்பட்டு இருந்த ஆதார் கார்டுகள் மற்றும் தபால்களை பார்வையிட்டார்.

    இதனை கொட்டி சென்ற தபால் ஊழியர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews

    Next Story
    ×