search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
    X

    விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

    விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.
    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் உள்ள அவருடைய நினைவு மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விலை உயர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் தவறு. தரமான பாடப்புத்தகங்கள் மதிப்பு கூட்டப்பட்ட விலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாகவே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.

    டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை பார்த்து வியந்தனர். அந்த அளவுக்கு பாடப்புத்தகங்கள் தரமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகங்களை காட்டிலும் தமிழக அரசு தயாரித்துள்ள பாடப்புத்தகங்கள் தரம் வாய்ந்தவை.

    தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்கள் குறித்து தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். அவ்வாறு எழுதாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆசிரியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஒரு சில ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×