search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 3500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 3500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அப்போது பல்வேறு துறைகள் மேற்கொள்ளப்பட உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்கள் கூறியதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பவுர்ணமி மிகவும் விசே‌ஷமாக அமைந்திருப்பதால், அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு வருகிற 29-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி அளவில் பவுர்ணமி தொடங்கி, மறுநாள் 30-ந் தேதி காலை 6.54 வரை பவுர்ணமி உள்ளது.

    கோவில் நிர்வாகம் சார்பில் சித்ரா பவுர்ணமியன்று அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அன்றைய தினம் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, தரிசனம் வரிசை படுத்துதல், தரையில் விரிப்புகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    திருவண்ணாமலை நகராட்சி சார்பாக 9 தற்காலிக பஸ் நிலையங்களிலும் மின்சார வசதி, விளக்குகள், குடிநீர், கழிவறை, குப்பை தொட்டிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 25 இடங்களில் தற்காலிக கார் பார்க்கிங் வசதியும், 50 இடங்களில் தற்காலிக சிறுநீர் கழிக்கவும், 20 இடங்களில் குடிநீர் வசதியும் மற்றும் மருத்துவ முகாம்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகிறது.

    மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் அருகில் 2 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்திட ஏற்பாடு செய்யப்படுகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக 15 இடங்களில் இலவச மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலமாக அன்னதானம் வழங்கும் இடங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்று அனுமதி வழங்குவதற்கும், கிரிவலப் பாதையில் கழிவறை, குடிநீர், தெரு விளக்குகள் உள்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக 3,500 சிறப்பு பஸ்கள், 8,600 நடைகள் இயக்கப்பட உள்ளது.

    சிறப்பு பஸ்கள் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், பெங்களூரு, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி நாட்களான 29 மற்றும் 30-ந் தேதி ஆகிய 2 நாட்களும் தேனிமலை டாஸ்மாக் கடை மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×