search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி உஷா குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல்
    X

    இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பலியான கர்ப்பிணி உஷா குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல்

    திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷாவை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் அவர் பலியானார். அவரது குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல் கூறினார்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவரது மனைவி உஷா (30). கடந்த 7-ந் தேதி ராஜாவும் உஷாவும் திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டு விழாவிற்காக சூலமங்கலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது திருச்சி திருவெறும்பூர் அருகே வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த உஷா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சூலமங்கலத்தில் உள்ள ராஜா வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்திலிருந்து நிதியுதவி வழங்கினார். அவருடன் மாவட்ட செயலாளர் தமிழருவி, சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் முருகேசன், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் உள்பட பலர் உடன் சென்றனர்.

    Next Story
    ×