search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் அபூர்வ ஆமை கடத்தல்- 2 வாலிபர்கள் கைது
    X

    கேரளாவில் அபூர்வ ஆமை கடத்தல்- 2 வாலிபர்கள் கைது

    கேரளாவில் 24 கிலோ எடையுள்ள அபூர்வ ஆமை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் சாலக்குடி மதுவிலக்குத்துறை அதிகாரி கிரிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மொபட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு பையில் இந்தியாவில் அதிவேகமாக அழிந்து வரும் உயிரினமான ‘ஏசியன் ஜாஷாதிக் டோர்டஸ்’ என்ற ஆமை இருந்தது. இந்த வகை ஆமைகள் ஏரி, குளம், குட்டைகளில் வசிக்க கூடியதாகும். இந்த ஆமையை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் மீறி வைத்திருந்தால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சட்டம் உள்ளது.

    ஆமையை கைப்பற்றிய போலீசார் அதனை கடத்திய வைசாலியை சேர்ந்த சுரேஷ் (வயது 28), வெற்றிலையை சேர்ந்த மனேஸ் (27) ஆகியோரை கைது செய்து வன அதிகாரி வின்சென்டிடம் ஒப்படைத்தனர்.

    சாலக்குடி வனத்துறையினர் கடத்தப்பட்ட ஆமையின் எடையை பரிசோதனை செய்தபோது அது 24 கிலோ இருந்தது. பின்னர் அதனை சாலக்குடியி வனப்பகுதியில் உள்ள நீர்நிலையில் விட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    Next Story
    ×