search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் ஜெயராமனை கண்டித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு
    X

    பேராசிரியர் ஜெயராமனை கண்டித்து மயிலாடுதுறையில் கடையடைப்பு

    ராமர் படத்தை அவமதித்த பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கண்டித்து இந்து கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
    மயிலாடுதுறை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியால் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது.

    இதனால் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க., திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியின் முன்பு கடந்த 20-ந் தேதி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது.

    அப்போது ராமர் படத்தை போராட்டக்குழுவினர் செருப்பால் அடித்து அவமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 14 பேரை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    போராட்டத்தின் போது ராமர் படத்தை அவமதித்த பேராசியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கண்டித்து இந்து கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    மயிலாடுதுறை பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கச்சேரி சாலை, கும்பகோணம் ரோடு, மகாத்மா காந்தி சாலை, பட்டமங்கலம் சாலை, பெரிய கடை வீதி, பெரிய கண்ணார வீதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மயிலாடுதுறை பகுதியில் சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடையடைப்பு போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  #tamilnews
    Next Story
    ×