search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
    X

    இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

    திருச்சியில் உஷா பலியான வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு ஏப்ரல் 4-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    திருச்சி:

    திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் கடந்த 7-ந்தேதி இரவு ஹெல்மெட் சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா-உஷா (வயது 34) தம்பதி சென்ற மோட்டார் சைக்கிளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் பின் தொடர்ந்து சென்று எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்ததில் உஷா பலியானார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த திருச்சி பெல் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் திருச்சி ஜே.எம்.6 நீதிபதி சகிலா முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் காமராஜின் காவலை ஏப்ரல் 4-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி சகிலா உத்தரவிட்டார். #Tamilnews
    Next Story
    ×