search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரளா
    X

    பவானி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரளா

    காவிரி இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்கப்பட்டு விட்டால் கேரளாவில் புதிய தடுப்பணைகள் கட்ட முடியாது என்பதால் அதற்கு முன்பு மேலும் தடுப்பணைகளை கட்டுவதில் கேரளா தீவிரம் காட்டுகிறது.
    கோவை:

    பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி, சோலையூர், பாடவயல், தீரக்கடவு, சாவடியூர் ஆகிய 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்த கேரள அரசு திட்டம் தீட்டியது.

    விதிகளை மீறி தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவ்வாறு தடுப்பணைகள் கட்டினால் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விவசாய நிலங்கள் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட் டது.

    எனவே தடுப்பணை கட்டும் முடிவை கேரள அரசு கைவிடக்கோரி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

    இதைபொருட்படுத்தாமல் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் கேரள பொதுப்பணித்துறை தடுப்பணைகளை கட்டி முடித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்தநிலையில் காவிரி இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை அமைக்கப்பட்டு விட்டால் கேரளாவில் புதிய தடுப்பணைகள் கட்ட முடியாது என்பதால் அதற்கு முன்பு மேலும் தடுப்பணைகளை கட்டுவதில் கேரளா தீவிரம் காட்டுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வதாக சோலையூர் பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கியது. இதை கண்டித்து கோவையில் மீண்டும் போராட்டங்கள் நடந்தன. தந்தைபெரியார் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளை திரட்டி கோவை-கேரளா எல்லையான ஆனைக்கட்டியில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    மேலும் தடுப்பணை பணிகளை நிறுத்தக் கோரி அனைத்து கட்சிகள் சார்பில் கேரள முதல்-மந்தியை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான அனுமதியை கேட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஏற்கனவே திட்டமிட்ட இடத்தில் அல்லாமல் அட்டப்பாடி அருகே ரெங்கநாதபுரம் பகுதியில் புதியதாக தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தடுப்பணை கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களை கொட்டுவதற்கு இடத்தை சமன் செய்து அதற்கான பொருட்கள் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை அப்பகுதியில் இறக்கி உள்ளது. இது கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-



    கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கைவிடக் கோரி கேரள முதல்-மந்திரியை சந்திக்க வலியுறுத்த உள்ளோம். இதற்காக அனைத்து கட்சிகள் சார்பில் கேரள முதல்-மந்திரியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்-மந்திரியை சந்தித்து இந்த பிரச்சினையின் தீவிரம் குறித்து விளக்குவோம் என்றார்.
    Next Story
    ×