search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
    X

    டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ந் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பாலகிருஷ்ணன் கூறினார்.
    திருவாரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கருத்தாகும். அப்படியே நிர்பந்தத்தின் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தாலும் அது பெயரளவுக்கே இருக்கும்.

    இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

    ஆனால் இதுபோன்ற தீர்மானங்களுக்கு இணங்கி காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அமைக்க மாட்டார். இந்த தீர்மானத்தை மட்டுமே நம்பி இருந்து விடாமல் அதிக அதிகாரம் கொண்ட ஆணையம் அமைக்க வற்புறுத்தி மீண்டும் அனைத்துக்கட்சி கூடி வலிமையான போராட்டங்கள் நடத்த வேண்டும்.

    தேவைப்பட்டால் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராடுவது போன்ற வலிமையான போராட்டங்களை கொண்டு தமிழக உரிமையை மீட்டெடுக்க முடியும்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பிரசார இயக்கமும், அதனை தொடர்ந்து 5-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×