search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலாளியை கொன்று புதைத்த நண்பர் கைது- வாக்குமூலம்
    X

    திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலாளியை கொன்று புதைத்த நண்பர் கைது- வாக்குமூலம்

    திருப்பூரில் சாயப்பட்டறை தொழிலாளியை கொன்று புதைத்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (32). இவர் திருப்பூர் அங்கேரி பாளையத்தில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் உசிலம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் (26) என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் நண்பர்கள். சாயப்பட்டறையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் கணேசன் மாயமானார்.

    அவரை சக தொழிலாளர்கள் தேடினார்கள். அப்போது கணேசன் கொலை செய்யப்பட்டு சாயப்பட்டறை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சாயப்பட்டறைக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சியை சோதனை செய்தனர். அப்போது கணேசனும் ஆனந்தனும் மாடிக்கு செல்வதும் திரும்பி வரும் போது ஆனந்தன் மட்டும் வரும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதனால் போலீசாருக்கு ஆனந்தன் மீது சந்தேகம் வந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் கயல்விழி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையில் இன்ஸ் பெக்டர் ராஜன் பாபு, போலீஸ் காரர்கள் நல்லுசாமி, ஜெயக்குமார், அம்சத்குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    தனிப்படை போலீசார் ஆனந்தனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதனை தொடர்ந்து திருப்பூர் திரும்பினார்கள். இங்கு உசிலம் பட்டியை சேர்ந்தவர்கள் வேலை பார்க்கும் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆனந்தன் வீரபாண்டி பகுதியில் வேலை கேட்டு வந்தது தெரியவந்தது. அவரை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தென்னம் பாளையம் மார்க்கெட் பகுதியில் ஆனந்தன் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

    போலீசாரிடம் ஆனந்தன் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனக்கு கஞ்சா பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை கணேசன் கண்டித்தார். கஞ்சா பிடித்தால் சாயப்பட்டறை உரிமையாளரிடம் கூறி விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரத்தில் இருந்தேன்.

    சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்தேன். கணேசன் மாடியில் இருந்தார். நானும் அங்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே கணேசனை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொன்றேன். பின்னர் பிணத்தை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசினேன். அதன் பின்னர் கீழே இறங்கி வந்து பிணத்தை தூக்கி சென்று அங்குள்ள குப்பை கிடங்கில் புதைத்தேன். மறுநாள் வழக்கம் போல் வேலைக்கு சென்றேன். ஆனால் சாயப்பட்டறையில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் மாடிக்கு சென்றதை போலீசார் கண்டு பிடித்து விட்டனர்.

    இதனால் பயந்து போய் தப்பி விட்டேன். எனது ஊர் காரர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு சென்று வேலை தேடினேன். தென்னம் பாளையம் மார்க்கெட் பகுதிக்கு வேலை கேட்டு வந்த போது போலீசாரிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews

    Next Story
    ×