search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் அமைந்துள்ள இயற்கை கொஞ்சும் அலையாத்திக்காடு.
    X
    முத்துப்பேட்டையில் அமைந்துள்ள இயற்கை கொஞ்சும் அலையாத்திக்காடு.

    குரங்கணி தீ விபத்து எதிரொலி - அலையாத்திகாட்டுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

    குரங்கணி காட்டு தீ மற்றும் வங்க கடலில் உருவான புயல் சின்னம் மற்றும் கடல் சீற்றம் ஆகியவை காரணமாக அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இயற்கையின் வரமாக அமைந்துள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவுக் கொண்ட காடாகும். இந்த அலையாத்திக்காடுகளை காண சுற்றுலாப்பயணிகள் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது மனதை சொக்க வைக்கும் அனுபவமாகும். இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு மனதை மயக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகை பிரமிக்க வைக்கும்.

    ஆங்காங்கே தென்படும் பறவைகளின் சங்கீத மொழி நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்குச் செல்வதும் ஒரு ஆனந்தம்தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறுவார்கள். அந்த அளவிற்கு ஒட்டுமொத்த இயற்கையின் அழகை இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம், குரங்கணியில் வனத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 14 உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மற்றுமின்றி உலகளவில் பெரும் பரபரப்வை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது.

    இந்த தகவல் தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை வனத்துறை அலுவலர் வீராச்சாமி கூறுகையில், நமது நாட்டின் மிகப்பெரிய காடான அலையாத்திகாடு இப்பகுதி கிடைத்த ஒரு பொக்கி‌ஷம், இதனை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். இந்த காட்டிற்கு சுற்றுலா செல்ல அரசு சார்பில் இதுநாள்வரை உரிய அனுமதி வழங்கவில்லை என்றாலும் மக்கள் இந்த காட்டின் மீது உள்ள ஆர்வத்தால் உள்ளே செல்ல அனுமதித்து வந்தோம்.

    சமீபத்தில் ஏற்பட்ட குரங்கணி காட்டு தீ மற்றும் வங்க கடலில் உருவான புயல் சின்னம் மற்றும் கடல் சீற்றம் ஆகியவை காரணமாக அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் வந்து ஏமாற தேவையில்லை. உயர் அதிகாரிகள் உத்தரவுக்கு பின்னர்தான் காட்டுக்குள் செல்ல அனுமதிப்பது குறித்து உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றார். #tamilnews



    Next Story
    ×