search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பு

    கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக-ஆந்திர அரசுகள் கடந்த 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தன. அதன்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும்.

    ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும். இத்திட்டத்தின்படி கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    முதலில் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர். பின்னர் 2450 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    தற்போது வினாடிக்கு 600 கனஅடி வீதம் தான் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 140 கனஅடியாக வீதம் வந்து சேருகிறது.

    கண்டலேறு அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கடந்த 27ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    முதலில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் திறக்கப்பட்டது. அதன்பின் வினாடிக்கு 300 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    நேற்று மாலை முதல் தண்ணீர் 360 கனஅடியாக மேலும் அதிகரிக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 30.85 அடியாக பதிவாகியது. 1943 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. #tamilnews

    Next Story
    ×