search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கணி தீ விபத்து: வழிகாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஈரோடு வாலிபர் கைது
    X

    குரங்கணி தீ விபத்து: வழிகாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஈரோடு வாலிபர் கைது

    குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12 பேரை அழைத்துச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்கு சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

    மதுரை மற்றும் கோவை ஆஸ்பத்திரிகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத் தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த பிரபு (வயது 30). என்பவர் பெருந்துறையில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது ஒருங்கிணைப்பில் ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ் குமார், கண்ணன், விவேக், சக்திகலா, சவிதா, திவ்யா, நேகா, தமிழ்செல்வன் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர், சாதனா, பாவனா ஆகிய 12 பேர் கடந்த 10-ந் தேதி குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர்.

    முறையான பயிற்சி இல்லாமலும் மலையேற்ற பயிற்சிக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படாமலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றது குறித்து பிரபுவிடம் போலீசார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

    போலீசாரிடம் பிரபு அளித்த வாக்குமூலத்தில் வனத்துறையினரின் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். இருந்தபோதும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் பிரபுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே சென்னை பாலவாக்கத்தில் உள்ள டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் ஜியாட் என்பவரை குரங்கணி போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

    மேலும் தேனி மாவட்டம் சின்னமனூர் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் அவரை பிடிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×