
மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணவிகள் மலை ஏறும் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மலைப்பாங்கான இயற்கை எழிலை பார்த்து ரசிக்க வேண்டுமானால், மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு, முன் எச்சரிக்கையுடன் அனுமதி அளிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளுக்கு தங்களை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்திட “கராத்தே” பயிற்சி கொடுக்கலாம். உடற்பயிற்சி தரலாம். துப்பாக்கி சுடும் பயிற்சி தரலாம். மலை, காடு, மிருகங்கள் இவைகள் இறைவனால் தரப்பெற்ற பெரும் பரிசுகள்.
எனவே மலை ஏறும்போது, சில பல காரணங்களால் மயக்கம் ஏற்படலாம். புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கம் போன்ற பிராணிகளால் திடீர் தாக்குதல் ஏற்படலாம். சிலருக்கு உடல் நோய் தாக்கி மருத்துவ வசதி இல்லாமல் மரணத்தை தழுவலாம்.
மலை ஏறும்போது நிச்சயமாக “மூச்சுத்திணறல்” ஏற்படலாம். குரங்கணியில் ஏற்பட்டது போல காட்டுத்தீ பரவலாம். தப்பி ஓடுவதற்கு வாய்ப்பு கிடையாது.
எனவே மலை ஏற்றப் பயிற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து ஆணையிட வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews