search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை சங்கர் பெயரில் அறக்கட்டளை தொடக்கம்- தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
    X

    உடுமலை சங்கர் பெயரில் அறக்கட்டளை தொடக்கம்- தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

    உடுமலை சங்கரின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது பெயரில் இன்று அறக்கட்டளை தொடங்கப்படுகிறது. விழாவில் பல தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 13-03-2016-ம் ஆண்டு உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கவுசல்யா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுதொடர்பாக கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சங்கரின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது மனைவி கவுசல்யா, சங்கர் பெயரில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை தொடங்குகிறார். இதற்கான விழா உடுமலை கொழுமத்தில் உள்ள காயத்ரி திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. விழாவின் தொடக்கமாக பறை இசை நடத்தப்படுகிறது.

    விழாவுக்கு எவிடென்ஸ் கதிர் தலைமை தாங்குகிறார். மகேசு முன்னிலை வகிக்கிறார். ஜீவானந்தம் வரவேற்கிறார். அறக்கட்டளை லோகோவை இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிடுகிறார். சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுகமும், நோக்கமும் என்ற நூலை அற்புதம்மாள் வெளியிடுகிறார். இதில் இயக்குனர்கள் ரஞ்சித், அமீர், சமுத்திரகனி, கோபி நயினார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். அறக்கட்டளை நோக்கங்கள் குறித்து கவுசல்யா பேசுகிறார்.

    இந்த விழாவில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன், அதியமான், மே 17 இயக்கம் திருமுருகன்காந்தி, ஜக்கையன், நாகை திருவள்ளுவன், களஞ்சியம், காசு.நாகராசன், மாரிமுத்து, பாரதி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை வழங்குகிறார்கள்.

    முடிவில் சத்யபிரபு நன்றி கூறுகிறார். #Tamilnews
    Next Story
    ×