search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி - உரிமையாளர் 2 பேர் கைது
    X

    தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி - உரிமையாளர் 2 பேர் கைது

    திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த வேலூரை சேர்ந்த உரிமையாளர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் கிருஷ்ணா நகரை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராயல் அக்ரோ நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    மாநிலம் முழுவதும் சுமார் 25 கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனத்தின் நிரந்தர வைப்புத்திட்டம், சிறு சேமிப்பு திட்டங்களில் பல்வேறு கவர்ச்சி சலுகைகளை அறிவித்தனர். நிரந்தர வைப்புத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 1½ மடங்கு பணம் தருவதாக தெரிவித்தனர்.

    இந்த வாக்குறுதிகளை நம்பி வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் தவணை முறையில் பணம் செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில், தவணை முடிந்த பிறகும், அந்நிறுவனம் அறிவித்தப்படி பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தை அணுகி கேட்ட போது, சரியாக பதில் சொல்லாமல் அவர்களை இழுத்தடித்து வந்தனர்.

    பல மாதங்கள் ஆகியும் பணம் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ராயல் அக்ரோ நிதிநிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    ராயல் அக்ரோ நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் வேலூரில் செயல்பட்டு வருவதால் 120-க்கும் மேற்பட்டோர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ரூ.1 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் சாய்நாதபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (வயது 59). அவரது மகன் ராஜ்கமல் (27) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தியாகராஜன், ராஜ்கமல் ஆகியோரது அசையும், அசையா சொத்துக்களை பொருளாதார குற்றபிரிவு போலீசார் கணக்கீடு செய்து வருகின்றனர்.

    வருவாய் துறை மூலம் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து பணம் இழந்த பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.#tamilnews
    Next Story
    ×