search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,288-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி ஒருபவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 592 ஆக இருந்தது. மறுநாள் (19-ந்தேதி) பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.23 ஆயிரத்து 488-க்கு விற்றது.

    நேற்று மீண்டும் ரூ.72 குறைந்து பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 288 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,911-க்கு விற்கிறது.

    பங்கு சந்தை முதலீடு அதிகரிப்பு, இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.20-க்கு விற்கப்படுகிறது. #Tamilnews
    Next Story
    ×