search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி ஹாசினியை கொலை வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் தஷ்வந்துக்கு நாளை தீர்ப்பு
    X

    சிறுமி ஹாசினியை கொலை வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் தஷ்வந்துக்கு நாளை தீர்ப்பு

    சிறுமி ஹாசினி வன்கொடுமை, கொலை வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் தஷ்வந்துக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
    செங்கல்பட்டு:

    மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முதலில் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    இதையடுத்து தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் குடும்பத்துடன் குன்றத்தூரில் குடியேறினார். அப்போது செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் சரளாவையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார். இந்தநிலையில் ஹாசினி கொலை வழக்கில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. மொத்தம் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 14-ந்தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் வேல்முருகன், ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு நாளை வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×