search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் யோகா செய்தால் சுகப்பிரசவம் ஏற்படும் - யோகா பாட்டி
    X

    பெண்கள் யோகா செய்தால் சுகப்பிரசவம் ஏற்படும் - யோகா பாட்டி

    பெண்கள் யோகா செய்தால் கை, கால் வலி வராது, சுகப்பிரசவம் ஏற்படும் என்று பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி கூறினார். #yogapatti #Padmashri
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணபதியைச் சேர்ந்த நானம்மாள்(90). இவர் 8 வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்டார். 90 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறார். இதனிடையே இவரின் இந்த திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கியுள்ளது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    பாராட்டு விழாவில் நானம்மாள் பாட்டி யோகா செய்த காட்சி.

    இதையடுத்து கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    விழாவில் யோகா பாட்டி நானம்மாள் பேசியதாவது,

    “ராகி, சாமை, கோதுமை, கம்பு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை தான் சாப்பிடுவேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து யோகாசனம் செய்வேன், பேரன், பேத்தி என அனைவருக்கும் யோகாசனம் சொல்லிக் கொடுப்பேன். பெண்கள் யோகா செய்தால் கை, கால் வலி வராது, சுகப்பிரசவம் ஆகும். அனைவரும் யோகா செய்தால் நலமுடன் வாழலாம்,” என்றார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக யோகா பாட்டி பத்மஸ்ரீ நானம்மாளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. #Yogapatti #Padmashri #tamilnews



    Next Story
    ×