search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள்
    X

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள்

    கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார். அதில் கோவையில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள் உள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் 1.1.2018 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.10.2017 முதல் நடைபெற்று வந்தது.

    அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள 1.10.2017 முதல் 30.11.2017 வரை படிவங்களை வாக்குப்பதிவு மையங்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்கள்,மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பெறப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்தது.

    இதில் பெறப்பட்ட படிவங்கள மீது வாக்குசாவடி நிலை அலுவலர்களை கொண்டு விசாரணை செய்யபபட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 14 லட்சத்து 2 ஆயிரத்து 986 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 26 ஆயிரத்து 298 பெண் வாக்காளர்களும், 286 இதர வாக்காளர்களும் என மொத்தம் 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த 3.10.2017 அன்று வெளியிடப்பட்டு இருந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 536 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பிறகு பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு 30 ஆயிரத்து 493 பேர் சேர்க்கப்பட்டுள்னர். 62 ஆயிரத்து 459 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விபரம்:-

    மேட்டுப்பாளையம் தொகுதியில் 132785 ஆண் வாக்காளர்களும், 138674 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 271487 வாக்காளர்கள் உள்ளனர்.

    சூலூர் தொகுதியில் 141339 ஆண் வாக்காளர்களும், 144819 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் என மொத்தம் 286170 வாக்காளர்கள் உள்ளனர்.

    கவுண்டம்பாளையம் தொகுதியில் 208085 ஆண் வாக்காளர்களும், 207839 பெண் வாக்காளர்களும, 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 415993 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை வடக்கு தொகுதியில் 156669 ஆண் வாக்காளர்களும், 154100 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 310796 வாக்காளர்களும் உள்ளனர்.

    தொண்டாமுத்தூர் தொகுதியில் 150789 ஆண் வாக்காளர்களும், 151623 பெண் வாக்காளர்களும், 55 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 302467 வாக்காளர்கள் உள்ளனர்.

    கோவை தெற்கு தொகுதியில் 120781 ஆண் வாக்காளர்களும், 120709 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம பாலின வாக்காளர்களும் என மொத்தம் 241501 வாக்காளர்கள் உள்ளனர்.

    சிங்காநல்லூர் தொகுதியில் 150163 ஆண் வாக்காளர்களும், 151182 பெண் வாக்காளர்களும், 25 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 301370 வாக்காளர்கள் உள்ளனர்.

    கிணத்துக்கடவு தொகுதியில் 143888 ஆண் வாக்காளர்களும், 146934 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 290853 வாக்காளர்கள் உள்ளனர்.

    பொள்ளாச்சி தொகுதியில் 103539 ஆண் வாக்காளர்களும், 109954 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 213507 வாக்காளர்கள் உள்ளனர்.

    வால்பாறை தொகுதி யில் 94948 ஆண் வாக்காளர்களும், 100464 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 195426 வாக்காளர்கள் உள்ளனர். #TamilNews
    Next Story
    ×