search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்- விவசாயிகளை மோடி சந்திக்கவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்
    X

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்- விவசாயிகளை மோடி சந்திக்கவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

    கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22-வது தஞ்சை மாவட்ட மாநாடு 3 மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று பாபநாசம் கீழ வீதியில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. பாபநாசம் ஒன்றிய செயலாளர் செயலாளர் காதர் உசேன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்க்சிஸ்ட் கட்சி ஜனநாயக முறையில் செயல்படும் கட்சி ஆகும். குஜராத் மாநில தேர்தலில் பா.ஜனதா அரசு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான மாற்று கட்சி இல்லாததால் பா.ஜனதா வென்றுள்ளது. அங்கு நடைப்பெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ராஜேஷ் சிங்கா வெற்றி பெற்றுள்ளார். மக்களின் மனநிலை மார்க்சிஸ்ட் பக்கம் திரும்பியுள்ளதை காட்டுகிறது. இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில் தான் ஜோதிபாசு உணவுக்கு வேலைத் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது மோடி அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை அமலாக்க மறுத்து வருகிறது. தற்போது பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டது.

    நடந்து முடிந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ரூ.50 கோடி அளவில் தமிழக கல்வி அமைச்சர் ஊழல் செய்துள்ளார். இது தமிழக மாணவர்களை ஏமாற்றும் செயல். உண்மையான , நேர்மையான முறையில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்.

    ஆர்.கே நகர் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க அரசு போலீசார் உதவியோடு பணப்பட்டுவாடா நடத்தியது.

    கன்னியாக்குமரிக்கு வந்த பிரதமர் மோடி கண்ணீரில் தவிக்கும் மீனவர்களையோ, பாதிக்கப்பட்ட விவசாயிகளையோ சந்திக்காமல் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 பேரில் 7 பேர் பா.ஜனதா கட்சியை சார்ந்த விவசாயிகள். அவர்களை மட்டும் சந்தித்து விட்டு சென்றார்.

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். உடுமலை சங்கர் கொலைக்கு நீதிமன்றம் உண்மையான தீர்ப்பை வழங்கியது பாராட்டத்தக்கது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல தரப்பினரும் உறுப்பினராக சேர்ந்து வருகின்றனர். வலுவான இயக்கமாக மாறி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் , மாநில குழு உறுப்பினர் நீலமேகம் மாவட்ட செயலாளர் மனோகரன் ,

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு பேசினார்கள். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் நன்றி கூறினார். இன்றும், நாளையும் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதிகள் மாநாடும் நடைபெறுகிறது.

    Next Story
    ×